search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிடம் இடிந்து விபத்து"

    • தரைமட்டமான கட்டிட இடிபாடுகளில் 15-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டுள்ளனர்.
    • கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்தக் கட்டிடம் தரைமட்டமான நிலையில், உள்ளே இருந்த 15-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.

    தேசிய பேரிடர் மீட்பு படையினர், கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 12 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளில் மொத்தம் நான்கு குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மீட்புப் பணிகளை பார்வையிட்டார். மேலும் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    • மகாராஷ்டிராவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.
    • இடிபாடுகளில் சிக்கிய 12 பேரை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்தக் கட்டிடம் தரைமட்டமான நிலையில், உள்ளே இருந்த 15-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 12 பேரை பத்திரமாக மீட்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாகினர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    விபத்து குறித்து அறிந்ததும் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடம் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார். விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்தார்.

    • மேலும் 4 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
    • வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரான்சின் மார்சேய் நகரில் நேற்று அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றியது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அருகில் உள்ள கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.

    இன்று மாலை நிலவரப்படி 4 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 4 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எரிவாயு கசிவு காரணமாக தீப்பற்றி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. 

    • இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க பயிற்சி பெற்ற நாய்களை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
    • 30 கட்டிடங்களில் உள்ள மக்களை வெளியேற்றியதாகவும் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின்தெரிவித்தார்.

    தெற்கு பிரான்சின் மார்சேயில் நேற்று அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

    சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றபோது இடிபாடுகளில் இருந்து கரும்புகைகள் எழுவதை வீடியோக்களில் காட்டுகிறது.

    மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க பயிற்சி பெற்ற நாய்களை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே மூன்றாவது கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் சிக்கியிருந்த 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவ இடத்தை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின், அப்பகுதியில் உள்ள 30 கட்டிடங்களில் உள்ள மக்களை வெளியேற்றியதாகவும் தெரிவித்தார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியானார். மேலும் 17 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். #BuildingCollapse
    லக்னோ :

    உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டதாக முதல் கட்டமாக தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து 17 பேரை உயிருடன் மீட்டனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பரிதாபமாக பலியானார் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து காவல் ஆணையர் ரன்வீர் பிரசாத் ஊடகங்களிடம் கூறுகையில், ’கட்டிட விபத்து தொடர்பாக விசாரணை நடத்தபட்டுள்ளது. கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அவர் தெரிவித்தார். #BuildingCollapse
    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் 10 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    அகமதாபாத் :

    குஜராத் மாநிலம், அகமதாபாத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஒதவ் எனும் இடத்தில் உள்ள  4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. 

    இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் 10 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பகுதியில் தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உதவியியுடன் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த விபத்து குறித்து அகமதாபாத் மாநகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா கூறுகையில், ‘ இடிந்து விழுந்த கட்டிடம் குஜராத் வீட்டு வசதி வாரியத்தால் கடந்த 1999-ம் ஆண்டு கட்டப்பட்டது. கட்டிடத்தில் விரிசல்கள் அதிகம் இருந்ததால் குடியிருக்க தகுதியற்றது என அறிவிக்கப்பட்டு இங்கு வசித்து வந்த 150-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஊழியர்கள் துணையுடன் நேற்று வெளியேற்றப்பட்டனர்.

    ஆனால், தங்களது உடைமைகளை எடுத்துவருவதற்காக 8 முதல் 10 பேர் இன்று மீண்டும் கட்டிடத்திற்குள் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.’ என தெரிவித்தார்



    மேலும், இதுவரை இடிபாடுகளில் இருந்து பலத்த காயங்களுடன் இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டங் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இன்று இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    சென்னை:

    சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டங் சாலையில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இன்று மாலை கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

    இடிபாடுகளில் சிக்கி 2 தொழிலாளர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
    ×